விளையாட்டு

நெய்மார் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு கொரோனா

பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அணியின் நட்சத்திர வீரர்களான, ஜே.ஆர் நெய்மார், ஏஞ்சல் எ மரியா மற்றும் லியாண்ட்ரோ பரேடஸ் ஆகிய வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இபிசா தீவுக்கு குறித்த வீரர்கள் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் ஆண்டர் ஹெர்ரெரா மற்றும் கீலர் நவாஸ் ஆகிய வீரர்களும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.