விளையாட்டு

நெய்மர் மீது பொய்க் குற்றச்சாட்டு

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர், கடந்த மே மாதம் பரிஸில் அமைந்துள்ள, ஹோட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய, பெண் மீது பிரேசிலில் பொலிஸார் பொய்யுரைத்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நஜிலா ட்ரிண்டேட் மற்றும் அவரது முன்னாள் கணவர் எஸ்டிவன்ஸ் ஆல்வ்ஸ் ஆகியோர் பொலிஸாரிடம் பொய்யுரைத்ததோடு, நெய்மரை மிரட்டுவதற்கு முயன்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், நெய்மர் எவ்வித தவறையும் இழைக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது..

இந்த குற்றச்சாட்டு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக, ட்ரிண்டேட்டின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பணம் பறிக்கும் நோக்கில், ட்ரிண்டேட் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிரேசில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.