இலங்கை

நெடுங்கேணியில் இராணுவ அதிகாரியின் வாகனம் மோதி முதியவர் பலி !

– வன்னி செய்தியாளர் –

வவுனியா வடக்கு நெடுங்கேணி நகர் பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் .

நெடுங்கேணி பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றின் இராணுவ அதிகாரியின் வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

நெடுங்கேணி நகர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இராணுவ பொறுப்பதிகாரியின் ஜீப் வாகனம் நெடுங்கேணி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள பாதசாரி கடவைக்கு அண்மையாக அத வேகம் காரணமாக துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவரை மோதி தள்ளியுள்ளது . இதனால் குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

பலியானவர் 4 பிள்ளைகளின் தந்தையான சேனைப்புலவு நெடுங்கேணியை சேர்ந்த 67 வயதுடைய கணபதிப்பிள்ளை பேரம்பலம் என்ற நபராவார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருவதோடு குறித்த மக்கள் நடமாடும் பகுதியில் 50km/h என்ற வேக அளவுக்கு உட்பட்டு வாகனம் செலுத்தவேண்டிய கட்டுப்பாடு உள்ள நிலையில் இராணுவ அதிகாரியின் வாகனம் அந்த வேக கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக பயணித்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் .