விளையாட்டு

நூலிழையில் தப்பினார் ஒசாகா

ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் பிரிவில் நாயோமி ஒசாகா இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலகின் முதலாம் தர நிலையில் உள்ள ஒசாகா நேற்றைய போட்டிவரையில் பின்னிலையில் இருந்தார்.
எனினும் நேற்று ஸ்லோவாகியாவின் அன்னா கரோலினாவை எதிர்த்து விளையாடிய அவர் 0-6 7-6 (7-4) 6-1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்றார்.
இதன்மூலம் அவர் முன்னதாகவே தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருந்து தப்பினார்.
அவர் தொடர்ச்சியாக இரண்டு க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.