Breaking News

நுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை !

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரானின் சகாக்கள் பயிற்சி பெற்ற நுவரெலியா விடுதி குறித்து பொலிஸாரிடம் தெரிவித்தபோதும் அது குறித்து உரிய நடவடிக்கை நுவரெலியா பொலிஸாரால் எடுக்கப்படாமை குறித்து பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்தோர் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர்கள் அது குறித்து கவனத்தில் கொள்ளவில்லையென பொலிஸ் உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்தே இந்த விசாரணைகள் நடக்கின்றன.