இலங்கை

நுவரெலியா செல்ல முயன்ற 106 பேருக்கு கொரோனா தொற்று

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் களுகல பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 106 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் ஒரு மார்க்கமான களுகல பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 1,825 கொவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனைகளிலேயே 106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக, சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.