இலங்கை

நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்புத் திட்டம் யாழில் ஆரம்பம்!

 


நீர்வளம் சார்ந்த மற்றும் ஏனைய உள்ளக மறைக் கைத்தொழில் முயற்சிகளில் மாதர்களை ஈடுபடுத்தி அவர்களை வலுப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டமான நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்புத் திட்டம் யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்தொழில் மற்றும் நீர்வள மூலங்கள் அமைச்சும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்த இத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் இத் திட்ட ஆரம்ப நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

கடற்தொழில் நீர்வளங்கள் அமைச்சர் அமைச்சரும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வட மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் , அரச அதிபர்கள். மாதர் சங்கங்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.