இலங்கை

நீர்கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் ஒருவர் பதவி நீக்கம்

 

– நீர்கொழும்பு செய்தியாளர் –

நீர்கொழும்பு மாநகரசபைக்கு ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில்(வாழைப்பழம் சின்னத்தில்) போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டிருந்த பிரெட் டெஸ்டர் , அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியை இழக்கின்றார்.

இவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 வாக்குகள் மட்டும் பெற்று அவர் கட்சி பெற்றுக்கொண்ட மொத்தவாக்குகள் அடிப்படையில் தேசிய பட்டியலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர் பதவி இழந்துள்ளமையால் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில்(வாழைப்பழம் சின்னத்தில்) கபிலநந்த சுலோச்சனா நியமிக்க படுவார் என்று எதிர்ப்பார்க்க படுகின்றது.

புதிதாய் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் மாநகரசபையின் ஆளும் தரப்புக்கு ஆதரவு தெரிவிப்பாரா? எதிர்க்கட்சியில் இருப்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெட் டெஸ்டர் எனப்படுபவர் என்பவர் உறுப்புரிமை நீக்கியமை தொடர்பான வர்த்தமானி நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டிருந்தது.