Breaking News

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 61 கைத்தொலைபேசிகள் மீட்பு !

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 61 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

61 கைத்தொலைபேசிகள் 51 சிம் கார்ட்டுகள் , 71 பற்றரிகள் , 30 சார்ஜர்கள் & 16 கிராம் ஹெரோயின் என்பனவும் சிறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.