இலங்கை

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம் சென்ற அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்த அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன். கடந்த ஏப்ரல் 21ம் திகதி குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தேவாலயத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன் தேவாலய நிர்வாகத்தினருடனும் அங்கு கடமையில் உள்ள இராணுவ அதிகாரிகளிடமும் கலந்தாலோசனை செய்தார்.

இவ் வேளையில் குண்டுத்தாக்குதலில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூறி மலர் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பீட்டர் டட்டன்.

குண்டு தாக்குதல்களில் பாதிக்க பட்ட தேவாலயங்கள் மிக விரைவாக திருத்தப்பணிகள் செய்வதையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சி கொள்வதாகவும் அவுஸ்ரேலிய பிரதமர் உட்பட அரசியல் பிரதிநிதிகள் நாட்டுமக்கள் சார்பாக இலங்கையில் நடந்த துக்ககரமான சம்பவத்ததில் உயிர்த்தியாகம் செய்த காயமடைந்த குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாகவும். இலங்கை அரசுக்கு அவுஸ்ரேலிய நீண்ட காலமாக நட்புறவுடன் ஆதரவாக செயற்பட்டு வருகின்றது என்றும், இனி வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படும் என்றும் இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்ரேலிய பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் தெரிவித்தார்.