Breaking News

நீர்கொழும்பில் தீ – கட்டுப்படுத்த பெரும் முயற்சி !

 

 

-நீர்கொழும்பு செய்தியாளர் –

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ஓவிடியாவை பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை மேட்டில் நேற்று இரவு முதல் தீ பரவல் ஏற்பட்டு இன்று பிற்பகல் வரை தீ பரவல் தொடர்ந்த நிலையில் உள்ளது.

தீயை அணைக்கும் பணியில் நீர்கொழும்பு மாநகரசபை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

குறித்த பிரதேசத்தில் நீர்கொழும்பு மாநகரசபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள், கட்டான பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத் தீப்பரவல் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.