இலங்கை

நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன மாணவியை தேடும் பணி இரண்டாது நாளாகவும் தொடர்கிறது !

 

நேற்று முதல் பெய்து வரும் அடை மழையினால் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் இரண்டு மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு மாணவியை தேடும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் இரட்டை சகோதரிகளான 12 வயதுடைய மதியழகன் லெட்சுமி , மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் ஆற்று நீர் பாதையில்பெருக்கெடுத்மையினால் பாதையை கடக்க முற்பட்ட போது நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்

இதில் மதியழகன் சங்கீதா என்ற மாணவி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரை தேடும் பணியில் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் சடலம் அக்கரப்பனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்