இலங்கை

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் ‘தமிழர் திருநாள்’ பொங்கல் உற்சவம் !

 

– வன்னி செய்தியாளர்-

சிங்கள மயமாக்கலின் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு “தமிழர் திருநாள் ” பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர் .

வருடம் தோறும் தைப்பொங்கல் தினத்துக்கு முதல் நாள் (14)தமிழர் திருவிழா பொங்கல் நிகழ்வுகள் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறும் நிலையில் இவ் வருடமும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது .

எதிர்வரும் 14.01.2020 அன்று காலை 8.30 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது .எனவே அனைத்து மக்களையும் இந்த பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர் .