Breaking News

நீராவியடி சம்பவத்திற்கு எதிராக யாழில் போராட்டம் !

 

– யாழ்.செய்தியாளர் –

முல்லைத்தீவு நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் நீதியை வலியுறுத்தியும் யாழ் நகரில் மாபெரும் போராட்டமொன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இந்த போராட்ட அழைப்பினை ஏற்று ஆரம்ப கால இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்,புளொட்,ஈ.பி.டி.பி, ஆகியன இணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தன .இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் கட்சி பேதங்கள் இன்றி கலந்துகொண்டன.