Breaking News

நீதி – சமத்துவம் – சமாதானம் தமிழருக்கு வழங்க மஹிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி !

 

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் ஆராயப்பட்டு அவர்களுக்கு நீதி ,சமத்துவம் – சமாதானம் கிடைக்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தபோது வலியுறுத்தியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி .

மூன்று நாள் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள மஹிந்தவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி மேலும் கூறியதாவது ,

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்து நாம் பேச்சு நடத்தினோம்.தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்படவேண்டுமென்பதை வலியுறுத்தினேன்.ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்படவேண்டுமென்பது எமது நிலைப்பாடு .அதை இலங்கை அரசும் புரிந்துகொள்ளுமென நாம் நம்புகிறோம்.இருநாட்டு மீனவர் பிரச்சினையில் மனிதநேய அடிப்படையில் செயற்படுவதென இணக்கம் காணப்பட்டது.- என்று தெரிவித்தார் மோடி .

இங்கு பேசிய பிரதமர் மஹிந்த – அயல்நாடான இலங்கைக்கு இந்தியப் பிரதமர் வழங்கும் முக்கியத்துவத்திற்கு வரவேற்பை தெரிவித்தார்.

 

முன்னதாக இரு நாட்டு தலைவர்கள் – அமைச்சர்மார் கலந்துகொண்ட உத்தியோகபூர்வ பேச்சு நடந்தது.