இலங்கை

நீதியை தாமதப்படுத்தாதீர் – இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி ஐ.நா அட்வைஸ்.!

“இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயன்முறையுடன் தொடர்புடைய குழுக்களை தாமதமின்றி அமைக்க வேண்டும். நிலைமாறுகால நீதிச்செயன்முறையை முன்னெடுப்பது பல தசாப்தங்களை கொண்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை இலங்கை மேலும் தாமதப்படுத்தக் கூடாது“

இவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடரில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் அம்மையார் சமர்ப்பித்து உரையாற்றும்போது தெரிவித்தார்..

ஆனால் பின்னர் – இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பதிலளித்து உரையாற்றி ஐ நா குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

“இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. ஐ.நா நிபுணர்குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கவில்லை.பொறுப்புக்கூறலில் இலங்கை திருப்திகரமாக செயற்பட்டு வருகிறது. இலங்கையிடம் போதுமான சுயாதீனமான நீதிக்கட்டமைப்பு உள்ளது. அதன்மூலம் உள்ளக விசாரணை அமைப்பு அமைகக்ப்படும். அதில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது.

வடக்கு கிழக்கில் பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. இராணுவத்தின் பிடியிலிருந்த 88 வீதத்திற்கும் அதிக காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டது. காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களிற்கேற்ப பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது“ என்றார் மாரப்பன..