இலங்கை

நீதியைப் பெறவே கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் என்கிறார் சமாதானம் !

 

” மனிதாபமின்மை என்றால் என்ன என்பதை நான் இலங்கை சிறையில் இருந்தபோதே கற்றுக் கொண்டேன். எனது விடயத்தில் இதுவரை எந்த பொறுப்புக்கு கூரலும் இல்லை.எனவே நீதியை பெறும் முதல் நடவடிக்கையாக இதனை நான் தாக்கல் செய்தேன்.இலங்கையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை பெற இது நம்பிக்கையை அளிக்கும் ”

இவ்வாறு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் ,கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கலிபோர்னியாவில் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ள கனேடிய பிரஜை ரோய் சமாதானம்..

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தாகவும் , திருமணம் செய்துகொள்ள இலங்கைக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டதுடன் சட்டத்தரணியை நாடவும் அனுமதி மறுக்கப்பட்டதாக சமாதானம் தெரிவித்துள்ளார்.

படையினர் தம்மை சித்திரவதை செய்ததுடன் மனைவி பிள்ளைகளை கொல்வதாக அச்சுறுத்தல் விடுத்து ஆவணம் ஒன்றில் கையொப்பம் வாங்கியதாக குற்றஞ்சாட்டியுள்ள ரோய் , ஒருவர் மீது மின்சாரத்தை பாய்ச்சுவதனை பார்க்க படையினர் தம்மை கட்டாயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.