Breaking News

நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தம் !

 

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி கிஹானிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு.அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படவேண்டுமென பல தரப்பிலும் செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.