உலகம்

நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட மாணவி கைது

நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தீக்சாவைப் பெங்களூரில் சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் மாணவி தீக்சா கொண்டுவந்த மதிப்பெண் பட்டியல் போலியானது எனக் கண்டுபிடித்த கலந்தாய்வு அமைப்பினர், சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.

இதன் அடிப்படையில் தீக்சா, அவர் தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்த பொலிஸார் பெங்களூரில் பாலச்சந்திரனைக் கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவி தீக்சாவைப் பெங்களூரில் கைது செய்த சென்னை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவியை பெப்ரவரி 1 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.