Breaking News

நிஸ்ஸங்க சிங்கப்பூர் வைத்தியசாலையில் !

 

அவன்காட் மோசடி தொடர்பில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அவர் தொடர்பான விபரங்களை தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு சேகரித்து வருகிறது.

அவர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.