இலங்கை

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க விரும்பும் தரப்புடன் கைகோர்ப்பேன் – கரு அறிவிப்பு !

 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அந்த பதவிக்காக போட்டியிடுவதல்லாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முனையும் தரப்புடன் இணைந்தே அதனை செய்யவேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் சஜித் ,நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து மழுப்பலான பதிலை வழங்கியிருந்த நிலையில் சபாநாயகரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

 

s