உலகம்

நியூஸிலாந்து பிரதமரை கௌரவப்படுத்திய டுபாய்

 

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து முஸ்லிம்களுக்கு ஆதரவை வழங்கிய நியூஸிலாந்து பிரதமரின் நடவடிக்கையை கௌரவிக்கும் விதமாக டுபாயில் உள்ள மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் அவருடைய படம் ஒளிபரப்பப்பட்டது .
மேலும் 1.5 பில்லியன் முஸ்லிம்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக டுபாய் அரசின் துணைத்தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 பள்ளிவாசல்கள்களுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நியூஸிலாந்திலும், வெளிநாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்கள் வைத்துள்ள தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை பிரதமர் ஜெசிந்தா தெரிவித்து மக்களையும் சந்தித்திருந்தார்.

இந்நிலையில்,