Breaking News

நியூசிலாந்து தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – சபையில் அமைச்சர் ருவன்

நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளூர் அடிப்படைவாதிகள் இலங்கையில் தாக்குதல்களை நடத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந்திருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

பிரதமர் மற்றும் எனக்கு அல்லது அமைச்சரவைக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த முன்னறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு நானோ பிரதமரோ அழைக்கப்படவில்லை.இப்படியான அடிப்படைவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு அவற்றின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.முன்னதாக வந்த எச்சரிக்கைகள் ஒரு சிலர் மத்தியில் மாத்திரமே பரிமாறப்பட்டுள்ளது