விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – இலங்கை அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  காலியில் நடந்தது .

இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் வட்லிங் (63 ரன்), வில்லியம் சோமர்வில்லி (5 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று நியூசிலாந்தின் கடைசி கட்ட வீரர்கள் கடுமையாக போராடினர். வாட்லிங் 77 ரன்னில் பிடிகொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டிரென்ட் பவுல்ட் 26 ரன்களும், அஜாஸ் பட்டேல் 14 ரன்களும் தங்கள் பங்குக்கு திரட்டினர். 9-வது வரிசையில் ஆடிய சோமர்வில்லி 40 ரன்களுடன் (118 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை மண்ணில், 2-வது இன்னிங்சில் 9 மற்றும் அதற்கு கீழ் துடுப்பாட்ட வரிசையில் அதிகமான பந்துகளை (118 பந்து) சந்தித்த 2-வது வீரர் என்ற சிறப்பை சோமர்வில்லி பெற்றார்.

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 106 ஓவர்களில் 285 ரன்கள் சேர்த்து ஓல்-அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளும், தனஞ்ஜெய டி சில்வா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 268 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 100 ரன்களுக்கு மேலான இலக்கை எந்த அணியும் விரட்டிப்பிடித்ததில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடின இலக்கை நோக்கி இலங்கை அணியின் 2-வது இன்னிங்சை அணித்தலைவர் கருணாரத்னவும், திரிமான்னேவும் தொடங்கினர். இருவரும் அவசரம் காட்டாமல் மிகவும் நிதானமாக ஆடினர். 22-வது ஓவரில் தான் முதல் பவுண்டரியே வந்தது. நியூசிலாந்தின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் இவர்கள் திறம்பட சமாளித்து அமர்க்களப்படுத்தினர்.

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்தது.. 4-வது இன்னிங்சில் இலங்கை ஜோடி ஒரு விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்சம் (133 ரன்) இது தான். மூன்று முறை கண்டத்தில் இருந்து தப்பித்த கருணாரத்ன 71 ரன்களுடனும் (168 பந்து, 2 பவுண்டரி), திரிமன்னே 57 ரன்களுடனும் (132 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்த நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

இதில் Karunaratne 122, L Thirimanne 64, A Mathews 28*) ஓட்டங்களுடன் இலங்கை அணி 6 விக்கட்டுக்காளால் வெற்றி பெற்றது