உலகம்

நியுசிலாந்து எரிமலை வெடிப்பு ஆறு சடலங்கள் மீட்புநியுசிலாந்தின் வெள்ளைத் தீவு எரிமலை வெடிப்பில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதோடு, இதுவரை ஆறு உடல்கள் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் அனைத்தும் கடற்படை கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த எரிமலை மீண்டும் ஒருமுறை சீற்றமடையக்கூடும் என  தெரிவிக்கப்படும் போதிலும் திட்டமிட்டபடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நியுசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துரிதமான சிறப்பு நடவடிக்கைக்காக எட்டுப்பேர் அடங்கிய குழு முன்னெடுத்துள்ளது.

குறித்த குழு அங்கு தரையிறங்கி மிகமிக துரிதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு திரும்பும் எனவும் எதிர்பார்கக்ப்படுகிறது.

கடந்த திங்களன்று இந்த எரிமலை வெடித்ததில் எட்டுப்பேர் கொல்லப்பட்டனர் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காணாமல் போனோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவர்களின் உடல்களை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.