விளையாட்டு

நியுசிலாந்துக்கு வெற்றி

 

பங்களாதேஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற உலகக்கிண்ண லீக் போட்டியில் நேற்று நியுசிலாந்து 2 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 244 ஓட்டங்களைப் பெற்று 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பதிலளித்து துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 47.1 ஓவர்களில், 8 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

82 ஓட்டங்களைப் பெற்ற ரோஸ் டெய்லர் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.