உலகம்

நிபந்தனை வேண்டாமென அமெரிக்காவிடம் கூறுகிறது வட கொரியா

 

அமெரிக்கா தனது வாக்குறுதியை (பொருளாதார தடைகளை திரும்ப பெறுவது) நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

நேற்று கட்சியின் கூட்டமொன்றில் கருத்து வெளியிட்ட வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் , அமெரிக்கா எங்களுக்கு நிபந்தனை விதிக்கக் கூடாதென தெரிவித்தார்.

வடகொரியாவுடன் மீண்டும் மூன்றாவது சுற்றுப் பேச்சு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் வடகொரியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.