உலகம்

நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை !

 

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருவதாக அதன் பொதுச் செயலர் அன்ரனியோ குவாட்ரஸ் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பணிபுரியும் 37 ஆயிரம் ஊழியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

2019ம் ஆண்டில் ஐ.நா.அங்கத்துவ நாடுகள், வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு தேவையான மொத்த தொகையில் 70 சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளன. இதன் மூலம், செப்., மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப்பற்றாக்குறையாக உள்ளது. எங்கள் பணப்புழக்க நடவடிக்கைகள், மாத இறுதிக்குள் குறையும் அபாயத்தை நாங்கள் உணர்கிறோம்.

எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நடுகளிடம் உள்ளது. செலவுகளை குறைக்க, மாநாடுகள், கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதேநேரத்தில், அதிகாரப்பூர்வ பயணத்தை, அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மேற்கொள்வது. பணப்புழக்க சிக்கல்களை தீர்க்க, ஐக்கிய நாடுகளுக்கு உறுப்பு நாடுகள் உதவ வேண்டும். ஐ.நா.,வின் நிதிநலனுக்கு , உறுப்பு நாடுகளே பொறுப்பு. ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் செயலர் கூறியுள்ளார்.

நிதி பற்றாக்குறை காரணமாக, தேவையான பணத்தை வழங்கும்படி அங்கத்துவ நாடுகளிடம் ஐ.நா., பொது செயலர் குட்ரெஸ் வலியுறுத்தினார். ஆனால், பணம் வழங்க அந்நாடுகள் மறுத்துவிட்டன. இவ்வாறு ஐ.நா., அதிகாரி ஒருவர் கூறினார்.