இலங்கை

நாவலப்பிட்டி நகரம் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி நகரம் முழுவதும் இன்று (17) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது.

கடந்த 15 ஆம் திகதி நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாளை 18 ஆம் திகதி வரை நாவலப்பிட்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நாவலபிட்டி வர்த்தக சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.