நாவலப்பிட்டி-அரங்கல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து
நாவலப்பிட்டி-அரங்கல பிரதான வீதியில் இன்று (08) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரு முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறியொன்றும் மோதுண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி டொன்சைட் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு முறையற்ற வகையில் முச்சக்கரவண்டியொன்று நுழைந்த போது லொறியுடன் மோதுண்டுள்ளது. இதன்போது லொறியின் சாரதி குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த முச்சக்கரவண்டியின் விபத்தை தவிர்க்க முயற்சித்த போது எதிரே வந்த முச்சக்கரவண்டியிலும் லொறி மோதுண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான இரு முச்சக்கரவண்டிகளினதும் சாரதிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.