இலங்கை

நாவலப்பிட்டியில் ஓட்டோ விபத்து – சாரதி உட்பட 07 மாணவர்கள் காயம்.

 

நாவலப்பிட்டி அப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி விபத்தில்
சாரதி உட்பட 08 பேர் பலத்த காங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நாவலப்பிட்டி அப்புகஸ்தலாவ பிரதான வீதியின் மண் சந்தி பகுதியில் அப்புகஸ்தலாவ முஸ்லிம் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி இன்று
காலை 07.30 மணி அளவில் விபத்துக்குள்ளாகியது

தரம் 01 முதல் தரம் 03 வரையான மாணவர்களை ஏற்றிச்சென்ற குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட்ட
08 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

முச்சக்கர வண்டியில் அதிகளவிலான மாணவர்களை ஏற்றிசென்றமையே
விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி
பொலிஸார் மேற்கொண்டு வருகின்னர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா