Breaking News

நாளை அவசர கட்சித் தலைவர்கள் மாநாடு – பிரதமர் கூட்டினார் !

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை அவசரமாக கூட்டவுள்ளார்.

தற்போதைய சூழலில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளன.

முக்கியமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் அனர்த்த நிலைமையால் அரசுக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டிய அவசியம் குறித்து இதன்போது கட்சித் தலைவர்கள் சிலர் வலியுறுத்தவுள்ளனர்.

வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இங்கு எடுத்துக் கூறவுள்ளனர்.

முன்னதாக இன்றுகாலை மாவை சேனாதிராஜா பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிமாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாதென்று தெரிவித்திருந்தார்.. அது தொடர்பில் நாளைய கூட்டத்தில் பேசப்படவுள்ளது.