இலங்கை

நாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், நாளாந்தம் அதிகப்பட்சமாக 2,500 பயணிகளை நாட்டுக்கு அழைத்துவர முடியுமென தான் எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமூகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.