உலகம்

நான் தனி ஆளில்லை : மோடி

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரம் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார் “நானும் காவலாளி தான்” என்று. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் பிரசாத்திற்காக இந்த வீடியோவை மோடி பதிவிட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக மார்ச் 31 ம் தேதி நாட்டு மக்களிடையே மோடி உரையாற்ற உள்ளார்.