உலகம்

நான்கு சீனர்கள் உள்ளிட்ட சுமார் 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் !

 

நைஜீரியாவின் வடக்கு  மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு சீனர்கள் உள்ளிட்ட சுமார் 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நைஜீயாவின் தனது முதல் கொரோனா வைரஸ் நோயாளரை உறுதிப்படுத்தியது.

நோயாளி நைஜீரியாவில் பணிபுரியும் ஒரு இத்தாலிய பிரஜை என்பதோடு, மிலனில் இருந்து வணிக தலைநகரான லாகோஸுக்கு பயணித்த ஒருவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 100 பேரை கண்டறிந்துள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், 58 பேர் லாகோஸ் மற்றும் ஓகுன் மாநிலங்களில்  சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நான்கு சீன நாட்டினரும் ஜோஸ் நகருக்கு அருகில் வசிக்கும் வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுரங்கக் குழுவின் ஒரு பகுதியாக கடந்த வாரம் சீனாவிலிருந்து நைஜீரியா வந்தடைந்தனர். நான்கு சீன நாட்டினருடன் தொடர்புகளைப் பேணிய மேலும் 39 நைஜீரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.