விளையாட்டு

நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா, விஹாரி விலகல்

காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.

சிட்னியில் இடம்பெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் விஹாரிக்கு காயம் ஏற்பட்டதோடு, அதற்கு முன்னதாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவரும் பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில் பும்ரா விலகியுள்ளதன் காரணமாக அவருக்கு பதிலாக நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.