Breaking News

நானுஓயா – லிந்துலை பகுதிகளில் நாளை மின் தடைப்படும்

 

தலவாக்கலை பி.கேதீஸ்

நானுஓயா,லிந்துலை ஆகிய பகுதிகளிலுள்ள பல பகுதிகளுக்கு நாளை 9.6.2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை, அத்தியாவசிய பாராமரிப்பு காரணமாக மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் நுவரெலியா பிராந்தியக் கிளை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை 9.6.2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை லிந்துலை நகரம், லிந்துலை வைத்தியசாலை, லெமிலியர் தோட்டம், சமர்செட் தோட்டம்,மட்டுக்கலை தோட்டம், சென்கூம்ஸ் தோட்டம், கல்கந்தவத்தை தோட்டம், வங்கிஓயா தோட்டம், ரதெல்ல தோட்டம், உடரதல்ல தோட்டம், ஆகிய அனைத்துக்கும் 3 மணித்தியாலங்கள் மின் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.