Breaking News

நாட்டை இன்னுமொரு போருக்கு இட்டுச் செல்ல நாம் தயாரில்லை – பாராளுமன்றத்தில் ரணில்

 

“இலங்கை வாழ் முஸ்லிம்கள் இவ்வாறான சம்பவங்களை எதிர்க்கின்றனர். அனைவரும் —-இவ்வாறானவற்றை எதிர்க்கின்றனர்.இன்னுமொரு போருக்கு நாட்டை இட்டுச் செல்ல நாம் தயாரில்லை..”

இவ்வாறு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதமர் ரணில். அவர் மேலும் கூறியதாவது ,

அமெரிக்க – ஜப்பான் – சீனா – இந்தியா – சிங்கப்பூர் – பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளின் தலைவர்கள் என்னுடன் பேசினர் . அவர்களின் உதவியுடன் நாம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் அரசியல் செய்யாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேலே வரும்போது அதனை சீர்குலைக்க இந்த முயற்சி நடந்துள்ளது. இப்படித்தான் பிற நாடுகளிலும் நடந்தன…”

என்றார் பிரதமர்