Breaking News

நாட்டு நிலைமை குறித்து ரணில் – மஹிந்த விசேட அறிவிப்புக்கள் !

 

வடமேல் மாகாணத்தின் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும் , நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து முழு விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதமர் ரணில் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசேட அறிக்கையொன்றை விட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச , மக்கள் பொறுமையாக செயற்படவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களை பாதுகாக்க முடியாத இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை மக்கள் செய்ய வேண்டுமே தவிர மற்றுமொரு கருப்பு ஜூலைக்கு வித்திட்டு விடக் கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.