இலங்கை

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்ள நாளை முல்லைத்தீவு வருகிறார் மைத்திரி!

 

– வன்னி செய்தியாளர் –

ஜனாதிபதியின் எண்ணகருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தர இருக்கிறார்.

இதற்காக ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து பல்வேறு ஆயத்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளைய தினம் வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் நிகழ்வாக வெலிஓயா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிரிஇப்பன் வெவ என்ற குளத்தை திறந்து வைத்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதோடு தொடர்ந்து முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிலையத்தை திறந்து ஸ்ரீலங்கா நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு மல்லாவி கலந்துகொண்டு மல்லாவி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக பிரிவை இலத்திரனியல் முறை மூலம் திறந்து வைக்கின்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதோடு சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களையும் வழங்கி வைக்கின்றார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.