Breaking News

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

சர்வதேச ரீதியாக 50,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவான 94வது நாடாக இலங்கை நேற்று (13) பதிவானது.

நேற்று இலங்கையில் 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரையில்  அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 646 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,267 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.