விளையாட்டு

நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது இலங்கை கிரிக்கெட் அணி 


இந்தியாவுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படவுள்ளதோடு, 16 பேரைக் கொண்ட இலங்கை குழாம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

பயிற்சியின்போது காயமடைந்த நுவான் பிரதீப்பிற்கு பதிலாக, கசுன் ராஜித அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னர், இலங்கை அணி இந்தியா நோக்கி பயணித்துள்ளது.