Breaking News

“நாட்டின் பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன்..” – சரத் பொன்சேகா தெரிவிப்பு !

 

“நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எனக்கு தந்த பொறுப்பை நான் மதிக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன். உங்களின் – நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் செயற்படுவேன். இராணுவத் தளபதியாக நான் செயற்பட்டபோது போரை இன்னுமொரு தளபதிக்கு வைத்துவிட்டு செல்லமாட்டேன் என்று கூறினேன்.அப்படியே செய்தேன். அதுபோலவே நான் இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். சட்டத்தினை கையில் எடுக்காமல் நாங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.

படைத்தரப்பினருக்கு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் தீர்க்க வேண்டும். ஓய்வுபெற்ற படையினர் பொலிஸாரின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். படையினர் குறித்து இன்று அக்கறையாக பேசும் ராஜபக்சவினர் அன்று படையினருக்கு என்ன செய்தனர்? அவர்களால் படையினர் பாதிக்கப்பட்டனர்.இங்கே பக்கத்தில் இருக்கும் இராணுவ தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது. அந்தக் காணி சீனர்களுக்கு வழங்கப்பட்டது. அன்று தனிப்பட்ட காரணத்தினால் அமெரிக்கா சென்ற கோட்டாபய இன்று இராணுவ நலன் பற்றி பேசுகிறார்.
சுனாமி நிவாரண நிதியை திருடிய ராஜபக்ச கூட்டம் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறது?
மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவோம்..”

-ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம் பி தெரிவிப்பு !