Breaking News

நாட்டின் நிலைமை குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கியது அரசு !

 

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அத்தியாவசிய சேவைகள் அமுலாக்கம் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளது அரசு.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

அமெரிக்கா (H.E Alaina Tepliz Ambassador to the USA), இங்கிலாந்து (H.E Sarah Hulton – High Commissioner to the UK), (Ambassador to the European Union), ஆஸ்திரேலியா (H.E. David Jhon Holly – High Commissioner to the Australia) கனடா (H.E. David McKinnon – High Commissioner to the Canada) ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாட்டில் இலங்கை அரசு செயற்படும் விதம் குறித்து தூதுவர்கள் இங்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.