Breaking News

” நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையானவர் கோட்டாபய ” – மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு !

 

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.எனவே அதனை சரி செய்யக் கூடிய ஒருவர் யார் என்பதனை ஆராய்ந்தால் அதற்கு சரியான தெரிவு கோட்டாபய ராஜபக்ச தான்.நாட்டின் இறையாண்மை , பாதுகாப்பு என்பவற்றை பாதுகாக்க அவரால் முடியும். அவர் தாம் சிறந்த நிர்வாகி என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார்.இலங்கை பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு.அனைத்து இன மக்களை பாதுகாத்து செயற்படும் ஒருவர் இன்று தேவை.நாங்கள் ஏகமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதால் கோட்டாபயவின் வெற்றிக்காக நாங்கள் தீவிரமாக செயற்படுவோம்..”

மஹிந்த சமரசிங்க எம் பி கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட பைசர் முஸ்தபா எம் பி , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளதால் இப்போதே கோட்டாபய வெற்றி பெற்றுவிட்டார் என்றே தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.