இலங்கை

நாடே சீர்கெட்டுள்ள போது ரூபவாஹினியை கட்டியெழுப்ப யோசிக்கிறீர்கள் ? – ரணிலை விளாசிய மைத்ரி !

” முறையான நிர்வாகம் இல்லாமல் நாடே சீர்கெட்டு போயுள்ளது . இதில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை சரி செய்யப் பார்க்கிறீர்களா ? ”

இவ்வாறு பிரதமர் ரணிலிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.நேற்றுமுன்தினம் அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்.அப்போதே இப்படி தெரிவித்துள்ளார் மைத்ரி .

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் புதிய நியமனங்களை செய்து அவற்றை சீர் செய்யப்போவதாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதனை மறுதலித்த ஜனாதிபதி இதுவிடயத்தில் தாம் தலையிட்டு முடிவொன்றை தருவதாகவும் கூறியுள்ளார்.

” இந்த நியமனத்தை நான் செய்யவில்லை.அமைச்சர் மங்களவே செய்திருந்தார்.இந்த நிலைமையில் ஏன் இப்படி மாற்றத்தை செய்ய விரும்புகிறீர்கள் எனத் தெரியவில்லை.முழு நாடே சீர்குலைந்துள்ள நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கட்டியெழுப்ப – அதுவும் இப்போது யோசிக்கிறீர்கள்.நான் இதுகுறித்து அரச ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறேன்.அதன் பின்னர் பார்க்கலாம் ”

இப்படி ரணிலிடம் முகத்திலடித்தாற்போல் கூறினாராம் மைத்ரி .