Breaking News

நாடு முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு – முப்படைகள் உஷார் நிலையில் !

 

ஐ எஸ் ஐ எஸ் இயக்கத் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அந்த இயக்கம் அதற்கு பழிவாங்கலாக உலகின் எந்த இடத்திலும் தாக்குதல் நடவடிக்கை எதனையும் நடத்தலாமென அஞ்சப்படுகிறது.

இலங்கையிலும் அப்படியான எதுவும் நடக்கலாமென அச்சமெழுந்துள்ளதால் அதன் காரணமாக நாடு முழுவதும் முப்படையினர் மற்றும் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். திடீர் வாகன சோதனைகள் , பாதுகாப்பு ஏற்பாடுகள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தல் உட்பட பல நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஏப்ரலில் இலங்கையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை வரவேற்று ஐ எஸ் தலைவர் பக்தாதி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.