இலங்கை

நாடு திரும்பிய 16,000 பேருக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த 19,000 இலங்கையர்களில் சுமார் 16,000 பேர் இன்றைய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக சீனாவின் வுஹானில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவர்களின் குழுவை அரசாங்கம் பெப்ரவரி 1 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர் என கூறினார்.

பின்னர் எடுக்கப்பட்ட ஒரு முடிவைத் தொடர்ந்து, மார்ச் 19 ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஜயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 40,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பக் காத்திருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.