Breaking News

நாடு திரும்பினார் ரணில் – கட்சி சீனியர்களுடன் அவசர பேச்சு !

 

டுபாய் நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.

இதனையடுத்து தற்போது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை ரணில் நடத்தி வருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்கிற சஜித்தின் அரசியல் கூட்டணி யானை சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டுமென கோரப்பட்டு வரும் நிலையில் இன்றைய ரணிலின் இந்த கூட்டம் அது தொடர்பில் ஆராயுமென தெரிகிறது.

இதேவேளை அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட சஜித் தரப்பு தயாராகியுள்ளதாக சொல்லப்பட்டது.