நாடு திரும்பினார் பஸில் !
ஓய்வுக்காக அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார்.
விமான நிலையத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கட்சி நடவடிக்கைளை அவர் இவ்வாரம் முன்னெடுப்பாரென அறியமுடிந்தது.